Toilet Rules: கழிப்பறை பயன்பாடு தொடர்பாக கடுமையான விதிகள் உள்ள ‘நாடுகள்’ !

ஒவ்வொரு நாட்டிலும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலில் உள்ளன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்ட விதிக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால், உலகில் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடர்பாக சில விதிகள் உள்ளன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா. இதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அடங்கும்.

சிங்கப்பூரில் மோசமான பழக்கவழக்கங்களுக்கு கடுமையான தண்டனைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கழிப்பறையை உபயோகப்படுத்தியக்குப் பிறகு ஃப்ளஷ் செய்யாத பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் சிங்கப்பூரில் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு பிளஷ் செய்யவில்லை என்றால் கம்பி எண்ண வேண்டியிருக்கும். அதற்கான நீங்கள் மன்னிப்பு கேட்டாலும், சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

சிங்கப்பூரில் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு ஃப்ளஷ் செய்யாவிட்டால், 150 டாலர்களுக்கு மேல் அதாவது 8 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நபர் அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | துரோகிகள் சூழ் உலகு; மனைவியின் கடைசி ஆசையை கேட்டு நொந்து போன கணவன்..!!

சுவிட்சர்லாந்தைப் பற்றி பேசினால், அங்கே வெறு விதமான விதிகல் உள்ளது. அங்கே கழிப்பறை தொடர்பாக மிகவும் விசித்திரமான சட்டம் உள்ளது. சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்கு மேல் கழிப்பறையில் பிளஷ் செய்யக் கூடாது. இங்கு அவ்வாறு செய்வது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் இது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் கழிப்பறையில் பிளஷ் செய்வதால், அருகில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை கெடுக்கும் என்பதால், இங்கு இந்த விதி அமலில் உள்ளது. இப்படிச் செய்து பிடிபட்டால் அதற்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். கடுமையான தண்டனையும் அனுபவிக்க நேரிடும்.

மேலும் படிக்க | போனில் அதிவேக இணைய சேவை கிடைக்காததற்கு ‘இந்த’ தவறு காரணமாக இருக்கலாம்! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.