ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட 5-வது விமானம் டெல்லி வந்தடைந்தது

புதுடெல்லி:
உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைக்காக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார்.
 
இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டது. வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இதை உறுதிபடுத்தினார்.
இந்நிலையில், புகாரெஸ்டில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை  8 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.