திருப்பதி தரிசன டிக்கெட் விலை அதிரடி உயர்வு: உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு அண்மையில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகளின் விலை விவரத்தை
தேவஸ்தானம்
வெளியிட்டுள்ளது.

இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே என்கிறார்கள். அதன்படி ரூ.120க்கு வழங்கப்பட்டு வந்த சுப்ரபாத சேவை டிக்கெட் ரூ.2 ஆயிரமாகவும், கோயிலுக்குள் 45 நிமிடம் அமர்ந்து சுவாமியை தரிசிக்க கூடிய அர்ச்சனை மற்றும் தோமாலை சேவைக்கான ரூ.200 மதிப்புள்ள டிக்கெட் ரூ.5 ஆயிரமாகவும், ரங்கநாயக மண்டபத்தில் வழங்கப்பட்ட வேத ஆசீர்வாத டிக்கெட் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், ரூ.1000 மதிப்புள்ள கல்யாண உற்சவ டிக்கெட் ரூ.2500 ஆகவும், வெள்ளிக்கிழமையில் நடக்கும் வஸ்திரசேவைக்கான ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் ரூ.1 லட்சத்து 2 ஆயிரமாகவும் நிர்ணயித்துள்ளது.

கையில் கிடைத்த ரிப்போர்ட்: ரெய்டு விட்ட ஸ்டாலின் – கை நீட்டுறீங்களா?

வியாழக்கிழமையில் நடைபெறும் திருப்பாவாடை சேவைக்கு பிறகு பிரசாதமாக வழங்கப்படும் ரூ.100 மதிப்புள்ள ஜிலேபி ரூ.500 ஆகவும் உயர்த்தியுள்ளது. சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன விஜயகாந்த்: தொண்டர்கள் செம ஷாக்!

பிப்ரவரி 26ஆம் தேதி சனிக்கிழமை கோயிலில் 56,559 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,751 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். தற்போது கொரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 41 லட்சம் கிடைத்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.