உக்ரைனிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய 'Mriya' விமானத்தை வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் போரால், இப்போது உலக அளவில், பெரும் பதற்றத்தையும்,மூன்றாம் உலக போர் மூளுமோ என்ற அச்சத்தையும் விதைத்துள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா தனது தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.  

இந்நிலையில் இதுவரை உக்ரைனில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய விமானத்தை ரஷ்யா அழித்துள்ளதாக முக்கிய செய்தி வந்துள்ளது. இந்த விமானத்தின் பெயர் ‘மரியா’ என்றும், இந்த தகவலை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட  தகவல் 

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஞாயிற்றுக்கிழமை, உலகின் மிகப்பெரிய விமானம் இன்று கியேவுக்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டதாக கூறினார். இந்த விமானத்திற்கு உக்ரேனிய மொழியில் ‘கனவு’ என்று பொருள்படும் AN-225 ‘Mriya’ என்று பெயரிடப்பட்டது. இது உக்ரேனிய ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமான அன்டோனோவ் என்பவரால் தயாரிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

உக்ரைன் தலைநகர் கியேவுக்கு வெளியே ஹோஸ்டோமெல் விமான நிலையத்தில் இந்த விமானம் ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தின் அழிவு செய்தியை வருத்தத்துடன் குறிப்பிட்ட உக்ரைன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகின் மிகப்பெரிய விமானமான ‘மரியா’ (தி ட்ரீம்) ரஷ்ய ராணுவத்தால் அழிக்கப்பட்டது. இந்த  விமானத்தை  நாங்கள் மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற எங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்.

உக்ரைன் காட்டியை மன தைரியம் 

மற்றொரு ட்வீட்டில் ரஷ்யாவும் தாக்கப்பட்டுள்ளது. ட்வீட்டுடன், உக்ரைன் விமானத்தின் படத்தையும் வெளியிட்டது, அதில் “அவர்கள்  எங்கள் மிகப்பெரிய விமானத்தை எரித்தனர், ஆனால் எங்கள் கனவு ஒருபோதும் அழியாது”. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபாவும் ட்விட்டரில், “உலகின் மிகப்பெரிய விமானமான AN-225 ‘Mriya’ (உக்ரைன்  மொழியில்‘கனவு’) இதுவாகும். ரஷ்யா எங்கள் ம்ரியாவை அழித்திருக்கலாம், ஆனால் ஒரு வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசின் கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாங்கள் வெல்வோம்.” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

வியாழன் அன்று தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து ரஷ்யா உக்ரைனின் பல நகரங்களில் க்ரூஸ் ஏவுகணைகளை வீசி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.