தெலுங்கானாவில் புர்காவில் தங்கத்தை தைத்து கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தின் தெலுங்கானாவின் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடைகொண்ட தங்கத்தை தனது உடையில் கட்டி கடத்த முயன்ற துபாயை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தங்கத்தை கடத்துவதற்காக, சிறு சிறு பாசிகளாக அதை செய்து கொண்டு, பின் அதை ரோடியத்தின் (rhodium) மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்து அதை அணிந்திருந்திருக்கிறார் அந்தப் பெண். மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்தி: உக்கிரமாகும் உக்ரைன் – ரஷ்யா போர்; பலியான குழந்தைகள் – கலங்க வைக்கும் தகவல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM