யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..!

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக மாதபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

செபியின் தலைவர் அஜய் தியாகியின் காலம் பிப்ரவரி 28 அன்று முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தான் மாதபி தலைவராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

ரஷ்யா – உக்ரைன் போரால் இந்திய ஐடி துறைக்கு பாதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..?!

கொஞ்சம் காத்திருங்கள்

கொஞ்சம் காத்திருங்கள்

கடந்த பிப்ரவரி 22 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செபியின் பதவிக்கான தலைவர் இன்னும் தேர்தெடுக்கப்படவில்லை. அப்போது அஜய் தியாகிக்கு பதவி காலம் நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார்களா? என கேட்டதற்கு அதற்கு பிப்ரவரி 28 வரை காத்திருங்கள் என்று கூறியிருந்தார்.

அஜய் தியாகி

அஜய் தியாகி

1984 பேட்ச்-ஐ சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான தியாகி , மார்ச் 1,2017 அன்று மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு 6 மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 2020ல் அவரது பதவிகாலம் மேலும் 18 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாதபி பூரி பச்
 

மாதபி பூரி பச்

இந்த நிலையில் செபியின் தலைவராக மாதபி பூரி பச் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செபியின் முதல் பெண் தலைவராவார். இவர் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். அதோடு செபியின் முழு நேர உறுப்பினராக 2017 – 2021 வரையில் இருந்தவர்.

மாதபியின் அனுபவம்

மாதபியின் அனுபவம்

மாதபி கண்காணிப்பு, முக்கிய போர்ட்போலியோக்கள், முதலீட்டு மேலாண்மை போன்ற முக்கிய அம்சங்களை கையாண்ட அனுபவம் உள்ளது. அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் படித்த மாதபி, மூன்று தசாப்தகால அனுபவத்தைக் கொண்டுள்ளார். 1989ல் ஐசிஐசிஐ வங்கியில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலும் அனுபவம்

இதிலும் அனுபவம்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்-க்கு செல்வதற்கு முன்பு கார்ப்பரேட் நிதி, பிராண்டிங், அரசு பத்திரங்கள், கடன் பிரிவுகளில் அனுபவமுள்ளது. அதேபோல தனியார் பங்கு நிறுவனமான கிரேட்டர் பசிபிக் கேபிட்டலுக்கு தலைமை தாங்கினார். அதன் பின்னர் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தால் அமைக்கப்பட்ட புதிய மேம்பாட்டு வங்கியின் ஆலோசகராக பணியாற்றினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

who is Madhabi puri buch? Appointed as the new Chairman of SEBI

who is Madhabi puri buch? Appointed as the new Chairman of SEBI/யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.