வட்டி விகிதம் 100% உயர்வு.. ரஷ்ய மத்திய வங்கி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!

ரஷ்யா- உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா உலக நாடுகளில் இருந்து தனியாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான தடை உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது.

போரை நிறுத்துவது குறித்துப் பெலாரஸ் நாட்டில் உக்ரைன் – ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தை இன்று நடத்த உள்ள நிலையில், பெலாரஸ் நாட்டின் பங்குச்சந்தை வர்த்தக நேரத்தை ஒரு மணிநேரம் தாமதமாகத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெறும் 5 லட்சத்தில் கார்.. அசத்த வரும் மாருதி சுசூகி..!

இதற்கிடையில் உக்ரைன் – ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே ரஷ்ய மத்திய வங்கி

 ரஷ்ய மத்திய வங்கி

ரஷ்ய மத்திய வங்கி

இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி இருப்பது போல் ரஷ்ய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் இரட்டிப்பு செய்துள்ளது. இன்றைய அறிவிப்பில் ரஷ்யா மத்திய வங்கி தனது 9.5 சதவீத வட்டி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 ரஷ்ய ரூபிள் மதிப்பு

ரஷ்ய ரூபிள் மதிப்பு

பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் தடை காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரஷ்ய நாணயமான ரூபிள் வரலாறு காணாத விதிமாகச் சரிவை சந்தித்துள்ளது. ரஷ்ய நாணயத்தின் மதிப்பின் தொடர் சரிவைத் தடுக்கவும், பணவீக்க உயர்வைத் தடுக்கவும் வட்டி விகிதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளதாக ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 ரஷ்ய பத்திரங்கள்
 

ரஷ்ய பத்திரங்கள்

இதே வேளையில் ரஷ்ய பத்திரங்களை விற்பனை செய்ய வந்துள்ள அனைத்து வெளிநாட்டு நிறுவனம் மற்றும் தனிநபரின் கோரிக்கைகளை ரத்துச் செய்ய உள்ளதாக ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவுக்குப் பின்பு அமெரிக்க டாலருக்கு எதிரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 30 சதவீதம் சரிந்து 119.50 ஆகச் சரிந்துள்ளது.

 ரஷ்ய நிறுவனங்களுக்கு உத்தரவு

ரஷ்ய நிறுவனங்களுக்கு உத்தரவு

மேலும் ரஷ்ய மத்திய வங்கி சுமார் 733 பில்லியன் ரூபிள்-ஐ ப்ரீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் நாணய புழக்கத்தை அதிகரிக்க முடியும் என நம்புகிறது ரஷ்யா. இதோடு ரஷ்யா அனைத்து நிறுவனங்களையும் தங்களது 80 சதவீத வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் வருமானத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

 SWIFT பேமெண்ட்

SWIFT பேமெண்ட்

200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 11,000க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இணைக்கும் SWIFT என்ற வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்ற முறையில் இருந்து ரஷ்யாவை மொத்தமாக வெளியேற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கனடா ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia central bank hikes interest rates to 20% from 9.5% to bolster ruble depreciation and inflation

Russia central bank hikes interest rates to 20% from 9.5% to bolster ruble depreciation and inflation வட்டி விகிதம் 100% உயர்வு.. ரஷ்ய மத்திய வங்கி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.