மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தேர்தலில் 173 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற்று வருகிறது.
மாநில கவர்னர் இல.கணேசன் Tamphasana பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மணிப்பூர் மாநில முதலமைச்சரும், ஹெய்ங்கேங் (Heingang) தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான Biren singh இம்பாலிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. எஞ்சிய 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது.