அங்கே "டமால் டுமீல்".. இங்கே "டும் டும் டும்".. உக்ரைன் பெண்ணை மணந்த ஹைதராபாத் பையன்!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் அனல் பறக்க யுத்தம் நடந்து கொண்டுள்ள நிலையில், அந்த நாட்டுப் பெண்ணை மணம் முடித்து கையோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை.

பல காதல்களால் போர்கள் மூண்டதையும் வரலாறு பார்த்துள்ளது. பல போர்களை காதல் நிறுத்தியதையும் பார்த்துள்ளது. அன்பை விட பெரிய ஆயுதம் ஏதேனும் இருக்க முடியுமா.. அப்படிப்பட்ட அன்பின் அடித்தளத்துடன் உருவான ஒரு இரு நாட்டு காதல் திருமணமாக சுப முடிவைக் கண்டுள்ளது.

இது ஒரு வித்தியாசமான திருமணம். வழக்கமான பொண்ணு, மாப்பிள்ளை அங்கு இருக்கவில்லை. மாறாக மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர். அவருக்கு ஜோடியாக அமர்ந்திருந்த பெண் உக்ரைன் நாட்டுக்காரர். ரஷ்யாவின் உக்கிரத் தாக்குதலுக்குள்ளாகி தடுமாறி வரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் உக்ரைனில் போர் நிற்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டனர்.

திருமண வரவேற்பு ஹைதராபாத்தில் நடந்தது. மணமகனின் பெயர் பிரதீக் மல்லிகார்ஜூன ராவ். மணமகளின் பெயர் லியுபோவ். இருவரும் காதலித்தனர். இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. என்ன விசேஷம் என்றால் இவர்களது திருமணம் உக்ரைனில் நடைபெற்றது. அங்கு வைத்து இந்திய முறைப்படி தாலி கட்டி லியுபோவை மனைவியாக ஏற்றுக் கொண்டார் பிரதீக். இவர்களது திருமண வரவேற்பு,
தெலங்கானா
மாநிலம் சில்கூரில் நடைபெற்றது. பலரும் திரண்டு வந்து இந்தத் தம்பதியை ஆசிர்வதித்தனர்.

திருமணம் முடிந்த நிலையில் அங்கு போர் வெடித்தது. இதனால் அங்கிருந்து வெளியேறி
ஹைதராபாத்
செல்ல தம்பதியினர் முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் இந்தியா வந்து சேர்ந்தனர். இங்கு அவர்களது திருமண வரவேற்பை பிரமாதமாக நடத்த மாப்பிள்ளை வீட்டார் முடிவு செய்தனர்.

இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சில்கூர் புரோகிதர் இவர்களின் நலனுக்காகவும், உக்ரைனின் நலனுக்காகவும், அமைதி திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்திக் கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்கள் சிலரும் கூட கலந்து கொண்டது விழாவை மேலும் சிறப்பாக்கியது.

உக்ரைனில் போர் வெறி உக்கிரமாகிக் கொண்டுள்ள நிலையில் அங்கு திருமணத்தை முடித்து விட்டு போர் சூழலில் அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்துள்ள இந்தத் தம்பதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.