பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு நகரின் நடுவே உள்ளது பல்லாண்டு கால பழமைவாய்ந்த கோட்டை. தொல்லியல் துறையின் கீழுள்ள இக்கோட்டையில் சமீபகாலமாக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. கோட்டை வளாக பின்பகுதியில் தண்ணீர் குழாய் அமைப்பதற்காக தொழிலாளிகள் மண்ணைத் தோண்டிய போது பீரங்கி குண்டு ஒன்று கிடப்பதை கண்டனர். தொடர்ந்து இத்தகவலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் 300 மீட்டர் ஆழத்தில் மண்ணை தோண்டியபோது மேலும் 46 பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 1766ல் ஹைதராலி கட்டி அமைத்தது என்று கருதப்படும் கோட்டை பழங்காலத்திலிருந்தே உள்ளது என்று கூறப்படுகின்றன. ஹெதராலி, சாமூதிரி ராஜா, பிரிட்டிஷ்க்காரர்கள் ஆகியோர் இக்கோட்டையை கையகப்படுத்தியிருந்தனர். அதனால் பீரங்கி குண்டுகள் இவர்களில் யாராவதும் பயன்படுத்துவதற்காக பாதுகாத்து வைத்திருக்கலாம். ரசாயன செயல்களின்படி தயாரித்த பாதுகாப்பு கவசத்தால் இக்குண்டுகளை பாதுகாக்க, தற்போது மண்ணை நீக்கி சுத்தம் செய்த குண்டுகளை திருச்சூரிலிருந்து வந்துள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு கவசத்திற்கு மாற்றப்படும். வரும் 8ம் தேதி மகளிர் தினத்தில் கோட்டை வளாகத்தினுள் நடக்கும் நிகழ்ச்சியில் பீரங்கி குண்டுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு கூறினார்.
Advertisement