உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. !

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், இன்று ஆறாவது நாளாக உச்சத்தினை எட்டியுள்ளது. பெலராஸில் நடந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும், பதற்றமான நிலையே இன்னும் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் தரையில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பல், ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் என மும்முனைகளிலும் படைகள் தயாராக இருப்பதாக தகவல்க வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதன் மத்தியில் தான் உக்ரைனில் கீவ் நகரில் உள்ள இந்தியர்களை எந்த வழியில் வேண்டுமானாலும் வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. மீண்டும் உச்சம் தொடுமா தங்கம்.. இன்று என்ன நிலவரம்!

15% வரை ஏற்றம்

15% வரை ஏற்றம்

இதற்கிடையில் இப்படி பதற்றமான நிலைக்கு மத்தியில் உக்ரைனுக்கு உதவும் விதமாக பலரும் கிரிப்டோகரன்சிகள் மூலமாக, உதவிகளை செய்து வருகின்றனர்.இதற்கிடையில் பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம் உள்ளிட்ட கிரிப்டோக்கள் 15% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக பெலராஸில் நடந்த பேச்சு வார்த்தை கைகொடுக்காத நிலையில், தற்போது மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் கிரிப்டோகரன்சிகள் பலவும் ஏற்றம் கண்டு வருகின்றன.

 பிட்காயின்

பிட்காயின்

பிட்காயின் மதிப்பானது தற்போது 15.35% அதிகரித்து, 444,439.50 டாலராக காணப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 44,532.94 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 37,963.29 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5.92% சரிவில் தான் காணப்படுகிறது.

 எத்தேரியம் மதிப்பு
 

எத்தேரியம் மதிப்பு

எத்தேரியத்தின் மதிப்பானது தற்போது 10.51% அதிகரித்து, 2935.50 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2972.33 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2610 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 21.27% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

 கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 8.73% அதிகரித்து, 0.962090 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.98 டாலராகவும், இதே குறைந்தபட்ச மதிப்பு என்பது 0.88 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 27.16% சரிவினைக் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும். இன்று தான் எட்டியுள்ளது.

 எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 6.30% அதிகரித்து, 0.776270 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.79 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.72 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 7.25% குறைந்துள்ளது.

 டோஜ்காயின் நிலவரம்

டோஜ்காயின் நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 6.48% அதிகரித்து, 0.132296 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.13 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.12 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 22.72% சரிவைக் கண்டுள்ளது.

 யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 5.64% அதிகரித்து, 10.44 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 10.81 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 9.51 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 38.76% சரிவில் தான் உள்ளது.

 போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 10.12% அதிகரித்து, 18.85 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 19.32 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 16.76 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 29.85% சரிவில் தான் உள்ளது.

ஷிபா இனு

ஷிபா இனு

ஷிபா இனு மதிப்பானது தற்போது 8.80% அதிகரித்து, 0.000026 டாலராக காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 23.03% சரிவில் தான் உள்ளது. இன்று பெரும்பாலான டிஜிட்டல் கரன்சிகளின் மதிப்பும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cryptocurrency prices on 1st march, 2022: bitcoin, shiba inu, Ethereum rise up to 15%

Cryptocurrency prices on 1st march, 2022: bitcoin, shiba inu, Ethereum rise up to 15%/உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்..!

Story first published: Tuesday, March 1, 2022, 18:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.