கீவ்,
ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன.
கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டிடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷியா அறிவுறுத்தி இருந்தது.
இந்தநிலையில், உக்ரைனுக்குள் புகுந்து ரஷிய தலைநகர் கீவ் மற்றும் கார்கில் நகரை ரஷிய படைகள் குறித்து வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள உலகின் 2-வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ கூறியுள்ளார்.