பிரயாக்ராஜ்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்; 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள நேற்று கங்கையில் புனித நீராடினர்.
உத்தர பிரதேசத்தின், தாராகஞ்ச் நகரில் உள்ள நாக்வாசுகி மற்றும் யமுனை நதிக் கரையில் உள்ள மங்காமேஷ்வர் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று காலை முதல் ஏராள மான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடுகளை நடத்தினர்.
அத்துடன், கங்கையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் கூறினர். பக்தர்களின் வசதிக்காக, கோவில்களின் சுற்றுப் பகுதிகளில், 650 நவீன கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
அதேபோல், தற்காலிக மருத்துவமனை மற்றும் முதல் உதவி மையங்களும் செயல்பாட்டில் இருந்தன.இதுபோல நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பிரயாக்ராஜ்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்; 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள நேற்று கங்கையில் புனித நீராடினர். உத்தர
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.