ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், இவ்விரு நாடுகளை வணிக ரீதியாக தொடர்புள்ள நாடுகள், இறக்குமதியாளர்கள் என பலரும் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் 100 டாலர்களை தாண்டியுள்ள நிலையில், அது பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற பதற்றமான நிலையும் இருந்து வருகின்றது.
இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பது ஒரு விஷயமாக உள்ளது. மொத்தத்தில் இது சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. !
கச்சா எண்ணெய் இறக்குமதி
எனினும் இந்தியாவுக்கு இது மட்டும் பிரச்சனை அல்ல, ஏனெனில் இன்று சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில், அதிகளவில் அண்டை நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுவதே.
எண்ணெய் சப்ளையை பாதிக்கலாம்
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பாளரான பாரத் பெட்ரோலியம் கார்ப்(BPCL), ஏப்ரல் மாதத்தில் இருந்து மத்திய கிழக்கு உற்பத்தியாளார்களிடம் இருந்து கூடுதல் எண்ணெய் கோருகிறது. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக எண்ணெய் சப்ளையை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பாளரான பிபிசிஎல், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 மில்லியன் பேரல்கள் எண்ணெயினை இறக்குமதி செய்கின்றது. அங்கு விற்பனையாளர் சரக்கு மற்றும் கப்பல்களுக்கு இன்சூரன்ஸ் செய்கிறது.
ரஷ்யாவிடம் ஆர்டர்
தென்னிந்தியாவில் உள்ள கொச்சின் சுத்திகரிப்பு ஆலையில், பிபிசிஎல் ஒரு நாளைக்கு 310 பேரல்கள் எண்ணெய் பதப்படுத்தப்படுகிறது. பிபிசிஎல் மார்ச் மாதத்தில் ஒரு மில்லியன் பேரலும், ஏப்ரல் மாதத்தில் மூன்று மில்லியனுக்கு முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வர்த்தகர்கள் ஏற்கனவே கொடுத்த ஆர்டருக்கு சப்ளை செய்ய தயாராக உள்ளனர்.
தெளிவான நிலை இல்லை
எனினும் எதிர்கால நலன் குறித்த சப்ளை குறித்து தெளிவான நிலை இல்லை. ஏப்ரல் மாதத்தில் நிலை எப்படி இருக்கும் என தெரியாது என் கூறியுள்ளதாக தெரிகின்றது. இந்த நிலையில் எதற்கும் தயாராக வேண்டும் என்ற நிலையில் பிபிசிஎல் முன் கூட்டியே திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன செய்யப்போகிறதோ?
ஏப்ரல் மாத சப்ளைக்கு அடுத்த வாரத்தில் இறுதி செய்யப்படவுள்ள நிலையில், மற்ற உற்பத்தியாளர்களை எதிர் நோக்கியுள்ளது பிபிசிஎல். எனினும் வளைகுடா நாடுகளும் சப்ளை குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என தெரிகிறது. ஆக ரஷ்யாவின் சப்ளை பற்றாக்குறையை ஈடுகட்ட தற்போதைக்கு இருப்புகளில் இருந்து சப்ளை செய்தாலும், அது எதிர்காலத்தில் நெருக்கடி நிலை என வரும் போது என்ன செய்யப்போகிறது. அதற்குள் இறக்குமதியினை அதிகரிக்குமா? என்ன செய்யப்போகிறதோ? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
Increasing problem for India, Oil imports to BPCL may decline due to war tensions
Increasing problem for India, Oil imports to BPCL may decline due to war tensions/இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. உக்ரைன் போர் பதற்றத்தால் BPCL-க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை!