மொகாலி,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது இப்போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் உட்பட பலர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.