சியோமி நிறுவனத்திடம் இருந்து பிரிந்து தனி நிறுவனமாக மாறிய போக்கோ, தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பார்சிலோனாவில் நடக்கும் உலகின் பெரிய
MWC 2022
நிகழ்வில், Poco X4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, 67W டர்போ சார்ஜிங் ஆதரவு ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது.
போக்கோ எக்ஸ் 4 ப்ரோ அம்சங்கள் (Poco X4 Pro Features)
புதிய போக்கோ போனில் 6.67″ அங்குல அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. 360Hz வரை டச் சேம்பிளிங் ரேட்டும் இதில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13 for POCO ஸ்கின் உடன் இயங்குகிறது. 5ஜி ஆதரவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்கு அட்ரினோ 619 எஞ்சின் உதவுகிறது.
போக்கோ எக்ஸ் 4 ப்ரோ கேமரா (Poco X4 Pro Camera)
கேமராவைப் பொருத்தவரை, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/1.9 அபெர்ச்சரில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், எப்போதும் போல 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை பின்பக்க கேமரா அமைப்பில் அடங்கி உள்ளது.
புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானா – இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் ஆப்பிள்!
செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
போக்கோ எக்ஸ் 4 ப்ரோ பேட்டரி (Poco X4 Pro battery)
புதிய போக்கோ போனில் 6ஜிபி, 8ஜிபி LPDDR4X ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரிக்காக 128ஜிபி, 256ஜிபி UFS2.2 வழங்கப்பட்டுள்ளது. அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை ஊக்குவிப்பதற்காக 67W டர்போ சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத அடிச்சுக்க முடியாது!
போக்கோ எக்ஸ் 4 ப்ரோ விலை (Poco X4 Pro price in india)
Laser blue, Laser black, POCO yellow ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. போக்கோ எக்ஸ் 4 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 205 கிராமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.22,999 என்ற தொடக்க விலையைக் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More:
ஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடு சைலண்டாக அறிமுகமாகும் Nokia போன்கள்Google Play Pass அறிமுகம் – 1000க்கும் மேற்பட்ட செயலிகள்