நாமக்கல் மாவட்டம் துறையூர் அருகே, பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் அரசு பேருந்தின் படிக்கெட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
எருமப்பட்டியில் இருந்து பவித்திரம் செல்லும் அரசு பேருந்துகளில் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
விபத்துகள் ஏதும் நிகழ்வதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு முறையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமெனவும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.