இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 மார்ச்02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 மார்ச் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை நிலைமை இன்று (மார்ச் 02ஆம் திகதி) இரவிலிருந்து 04ஆம் திகதி வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின்,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காலப்பகுதியில்மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்குமாகாணத்திலும் கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவாமாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.