கொழும்பு:
இலங்கையில் 80 சதவீத மின்சார உற்பத்தி நீர்மின் நிலையங்களை நம்பியே உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் நீர்மின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வறட்சி மற்றும் அணைகளில் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் நீர்மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் உற்பத்திக்கு தேவையான எண்ணையை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதனால் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று முதல் இலங்கையில் தினமும் 7½ மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மின் வெட்டினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.
தொடர்ந்து மின்வெட்டு நீடித்தால் இலங்கை மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் அபாய சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்…உக்ரைனில் இருந்து சீன மாணவர்களை மீட்க அதிபர் ஜின்பிங் தீவிரம்