மகா சிவராத்திரியை முன்னிட்டு 11.71 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நிகழ்ச்சி! <!– மகா சிவராத்திரியை முன்னிட்டு 11.71 லட்சம் அகல் விளக்குகள்… –>

மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம்  உஜ்ஜயின் மகா காளேஸ்வரர் கோயிலில் 11 லட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சிவ ஜோதி அர்ப்பணம் மகோத்சவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் 11 அகல் விளக்குகள் ஏற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அகல் விளக்குகளை ஏற்றினர். 5 பேர் அடங்கிய கின்னஸ் குழுவினர் நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ் அளித்தனர். 5 டிரோன் கேமராக்களும் இதற்காக பயன்படுத்தப்படட்டன. 

இந்நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட அகல் விளக்குகள், எண்ணெய் உள்பட அனைத்தும் கழிவாக வீணாக்காமல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.