மாஸ்கோ: 3வது உலகப்போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 7 வது நாளாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா, கெர்சான் நகரை முழுமையாக கைப்பற்றி உள்ளது. கார்கிவ் நகரை கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுடன் இன்று(மார்ச் 2- புதன்) இரவு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியதாவது: ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சந்தித்து வரும் உக்ரைன், வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்கினால், அது பேராபத்தாக மாறும். வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
3வது உலகப் போர் ஒரு வேளை ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அது பேரழிவை ஏற்படுத்தும். ரஷ்யா தனிமைபடுத்தப்படவில்லை. ஏராளமான நாடுகள் நட்பு நாடுகளாக உள்ளன.போரினால், பொருளாதார தடை ஏற்படும் என எதிர்பார்த்தோம். விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் மீது குறி வைப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement