வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் அண்மையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் நாட்களில் புயல் சின்னமாக உருவாகுமா என்ற கேள்வி தமிழக மக்கள் இடையே எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM