உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைனுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் உக்ரைன் அமெரிக்காவின் கட்டளையையே பின்பற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேற்கு நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை உக்ரைன் வாங்க ரஷ்யா அனுமதிக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May like This Video…