மரண அடி உறுதி… தயார் நிலையில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்: களத்தில் அமெரிக்கா?


ரஷ்ய ஜனாதிபதி புடினை சர்வாதிகாரி என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத்தளத்தில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்த பதிலடி எப்படி இருக்கும் என்பதில் கண்டிப்பாக ரஷ்ய ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மரண அடி உறுதி எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் தொடங்கிய முதல் 7 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் 2,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்கா போர் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் மரியுபோல் நகரங்களை ரஷ்ய துருப்புக்கள் முழுமையாக சுற்றி வளைத்துள்ளன.
மட்டுமின்றி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் ரஷ்ய தாக்குதலுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது.

மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றிவிடலாம் என களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து 7வது நாளாக கடுமையாக போராடி வருகிறது.
இதனிடையே, முன்னாள் குத்துச்சண்டை வீரரும் கீவ் நகர மேயருமான Vitali Klitschko தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை உக்ரைனில் 21 சிறார்கள் ரஷ்ய தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாகவும், 55 சிறார்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.