இலங்கையின் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம் 5 வருடங்களிலும் பார்க்க 488 மில்லியன் அமெரிக்க டொலராக உச்ச தொகையினை பதிவு செய்துள்ளது.
கொரோனாவின் அதீத தொற்று காலங்களிலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கை இத்துறை வளர்ச்சிக்கு பெருமளவு உதவியாக அமைந்துள்ளதாக இலங்கையின் ஒன்றிணைந்த ஆடை சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஆடை தொழில் துறையில் உள்ள ஊழியர்களில் 65% பேருக்கு வைரசு தொற்று தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்கப்படுள்ளதுடன் 95% பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அதிகரிப்பானது தேசிய உற்பத்தியில் அதிகளவான பங்களிப்பினையும் அந்நிய செலாவணி வீதத்தில் அதிகரிப்பினையும் வேலை வாய்ப்பினையும் அதிகரித்துள்ளதாக இணை ஆடை தொழிற்சங்க செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் இத்துறை பாரிய சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது.
ஜனவரி மாத ஏற்றுமதி மூலம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டுள்ளது. இவ் அதிகரிப்பானது முன்னைய காலங்களிலும் பார்க்க 23% அதிகரிப்பாகும்.
2021 டிசம்பர் வரையிலான 12 மாதக்கலப்பகுதியில் ஆடை ஏற்றுமதி மூலம் 5435.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.