இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ-விற்காகக் காத்திருக்கும் நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்த ஐபிஓ ஒத்திவைக்கப்படும் எனக் கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பின்பு மார்ச் மாதத்தில் ஐபிஓ வெளியிட வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ வெளியிட தயாராகி வரும் நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் உயர் பதவியில் முக்கியமான ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆப் இந்தியா
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆப் இந்தியா, அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான சுனில் அகர்வால்-ஐ புதிய தலைமை நிதியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளது.

சுனில் அகர்வால்
சுனில் அகர்வால் நிதியியல் துறையில் சுமார் 20 வருடங்கள் பணியாற்றி வரும் நிலையில் கடைசியாக ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். தற்போது எல்ஐசி நிறுவனத்தில் இந்த மாதம் பணியில் சேர்ந்துள்ளார். எல்ஐசி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் CFO பதவிக்கு ஆள் தேடும் பணியைத் துவங்கிய நிலையில் சில வாரங்களுக்குப் பின் சுனில் அகர்வால்-ஐ நியமனம் செய்தது.

CFO பதவி
லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி என்னும் பதவி இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டாளராக இருக்கும் எல்ஐசி இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட வேண்டும் என்பதற்காக நிர்வாகத்தில் பல மாற்றங்களைச் செய்த நிலையில், இதில் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் F&A பதவியை CFO ஆக மாற்றப்பட்டுள்ளது.

முன்னாள் அதிகாரி
எல்ஐசியில் நிதி மற்றும் கணக்கியல் (எஃப்&ஏ) பிரிவின் நிர்வாக இயக்குநராக இதற்கு முன்பு சுபாங்கி சஞ்சய் சோமன் இருந்தார், இவருடைய வெளியேற்றத்தின் காரணமாகவே தற்போது ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுனில் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
LIC hires Reliance-Nippon’s Sunil Agarwal as CFO ahead of IPO
LIC hires Reliance-Nippon’s Sunil Agarwal as CFO ahead of IPO எல்ஐசி நிறுவனத்தில் புதிய அதிகாரி.. அதுவும் ரிலையன்ஸ் நிப்பான் முன்னாள் ஊழியர்..!!