நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் கிங் தான்…பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை புது அவதாரம்

Pandian Stores Actress Sujitha Dhanush Play Badminton : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மனத்தில் பட்டா போட்டு அமர்ந்துள்ள நடிகை சுஜிதா தனுஷ் தற்போது நடிப்பை தாண்டி புது அவதாரம் எடுத்துள்ளார்.

சின்னத்திரையில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனி இடம் உண்டு. குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும்,  முன்னணியில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த சீரியல் ஒருசில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் ஹிட்டடித்து வருகிறது.

இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுஜிதா தனுஷ். பிறந்து சில மாதங்களிலேயே திரைத்துறையில் கால்பதித்த சுஜிதா தற்போது தமிழ் சீரியலின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

சீரியல் நடிப்பு மட்டுமல்லாமல், விளம்பர படங்கள் இயக்குவது யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கு தேவையாக கதைகள் சொல்வது என சுஜிதா பிஸியாக இருந்து வருகிறார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இவர் நடிகை ஹன்சிகாவை வைத்த இயக்கிய இரண்டு விளம்பரப்படங்களில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதோடு பாராதியார் இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் விசிட் அடித்த வீடியோககளை பதிவிட்டிருந்த நிலையில், தற்போது பேட்மிண்டன் விளையாடுவது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஓய்வு நேரங்களை தனது குடும்பத்தினருடன் கழித்து வரும் சுஜிதா அவ்வப்போது தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் சுற்றுலா சென்று வருகிறார். இவர்களுக்குள் நடக்கும் ஜாலியான நிகழ்வுகள் தொடர்பான வீடியோ வை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது குடுபத்தினருடன் இவர் பேட்மிண்டன் விளையாடும் காட்சியை இணைதய்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நாங்கள் கிங் தான் என்று கூறுவது போன்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.