கெய்ரோ,
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 60 நாடுகளை சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் ஸ்ரீநிவேதா, இஷா சிங், ருசிதா வினிர்கர் அடங்கிய இந்திய அணி 16-6 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
மேலும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி இத்தாலி அணிக்கு எதிராக ஆடிய வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் 6-16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து 4-வது இடத்தைப் பெற்றது.