100% வேலைவாய்ப்பு.. சராசரி சம்பளம் 34 லட்சம்.. அசத்தும் ஐஐடி..!

பொதுவாக ஐஐஎம் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்து முன்னணி நிறுவனங்கள் தேடி தேடி வேலைவாய்ப்பை அளிக்கும், ஆனால் உண்மையில் அனைத்து ஐஐஎம் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

இப்படியிருக்கையில் நாட்டின் முன்னணி ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் கல்கத்தா புதிய சாதனையைப் படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய இந்தியா முடிவு.. புதிய திட்டம் தீட்டும் ஆர்பிஐ..!

ஐஐஎம் கல்கத்தா

ஐஐஎம் கல்கத்தா

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்கத்தா தனது 57வது பேட்ச் மாணவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இக்கல்லூரி மாணவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 34.2 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐஐடி Vs ஐஐஎம்

ஐஐடி Vs ஐஐஎம்

ஐஐடி கல்லூரி பொருத்த வரையில் தற்போது அதிகப்படியான மாணவர்கள் சொந்தமாகத் தொழில் துவங்குவதிலும், வெளிநாட்டின் முன்னணி கல்லூரிகளில் படிக்கவும் செல்கின்றனர். இதனால் ஐஐடி கல்லூரியில் 100 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது சாத்தியம் இல்லை, ஆனால் ஐஐஎம் கல்லூரியில் படிப்பவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புகளுக்குச் செல்லவே படிப்பதால் 100 சதவீதம் ப்ளேஸ்மென்ட் சாத்தியமாகியுள்ளது.

190 நிறுவனங்கள்
 

190 நிறுவனங்கள்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்கத்தா கல்லூரியில் இந்த ஆண்டுச் சுமார் 190 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிப்பதற்காகக் கலந்து கொண்டது. இதில் பெரும்பாலான நேர்காணல்கள் விர்ச்சுவல் முறையில் தான் நடந்தது.

631 வேலைவாய்ப்புகள்

631 வேலைவாய்ப்புகள்

ஐஐஎம் கல்கத்தா கல்லூரியன் இறுதி கேம்பஸ் இண்டர்வியூவ் முடிந்த நிலையில் மொத்தம் 465 மாணவர்கள் பங்கேற்று 631 வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். அதாவது சில மாணவர்கள் ஒன்றுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இக்கல்லூரி மாணவர்களுக்கு அக்சென்சர் ஸ்ட்டார்ஜி, பெயின் அண்ட் கம்பெனி, பாஸ்டன் கண்சல்டிங் குரூப், EY பார்தியான், மெக்கென்சி அண்ட் கம்பெனி மட்டும் மொத்த வேலைவாய்ப்புகளில் 49 சதவீத வேலைவாய்ப்பை அளித்துள்ளது. மேலும் மார்கியூ அசர்ட் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்கி, தனியார் முதலீட்டு நிறுவனங்கள், வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் 18 சதவீத வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IIM Calcutta: 100 percent placement, with an average salary of Rs 34 lakh hits new record

IIM Calcutta: 100 percent placement, with an average salary of Rs 34 lakh hits new record 100% வேலைவாய்ப்பு.. சராசரி சம்பளம் 34 லட்சம்.. அசத்தும் ஐஐடி..!

Story first published: Friday, March 4, 2022, 8:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.