பாரிஸ்: உக்ரைன் – ரஷ்ய போர் நீடித்துவரும் நிலையில் இனிதான் மோசமான சூழல் துவங்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் உடன் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.
இந்தப் போரில் மோசமான சூழ்நிலை இனிமேல்தான் ஏற்படப்போகிறது என்று மேக்ரான் தெரிவித்ததாக அவரது உதவியாளர் தகவல் அளித்துள்ளார். நாஜி ஆதரவாளர்களை உக்ரைனில் இருந்து விரட்ட புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்ய அணு ஆயுத பிரிவை தயார் நிலையில் வைக்கும்படி விளாடிமிர் புடின் ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு அடுத்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
பாரிஸ்: உக்ரைன் – ரஷ்ய போர் நீடித்துவரும் நிலையில் இனிதான் மோசமான சூழல் துவங்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து அதிகரித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.