சென்னை,
நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
ஆண்கள் பிரிவில் கல்லூரி அணிகளான எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங், டி.ஜி.வைஷ்ணவா, சத்யபாமா, லயோலா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி., ஜி.கே.எம்., பாரதியார் கிளப் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.