புதுடெல்லி,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஒற்றையர் பிரிவின் முதலாவது ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், கிறிஸ்டியன் சிக்ஸ்காட்டையும், மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, மைக்கேல் டார்பேகாட்டையும் சந்திக்கின்றனர்.
சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் பிரிவின் ஆட்டத்தில் திவ்ஜி சரண் மற்றும் ரோகன் போபன்னா ஜோடி பிரெட்ரிக் நீல்சன் மற்றும் ஜோகன்ஸ் இங்கில்ட்சன் ஜோடியுடன் மோதுகிறது.
.@DavisCup World Group I Play-Offs 🔜 #INDvDEN
When and where to watch 📺#AITATennis 🇮🇳🎾 #DavisCup@ddsportschannel@SonySportsNetwkpic.twitter.com/oby6E8HKEl
— All India Tennis Association (@AITA__Tennis) March 3, 2022