சிட்னி : ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சிட்னி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஐந்து லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கனமழை கொட்டுகிறது. பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகர சாலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஐந்து லட்சம் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு எச்சரித்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாண தலைநகர் பிரிஸ்பேன் நகரமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இங்கு மட்டும் வெள்ளத்தில் சிக்கி, 63 வயது மூதாட்டி உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். லிஸ்மோர் என்ற இடத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 70 வயது முதியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இங்கும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
‘குயின்ஸ்லாந்து மாகாணத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை கொட்டும்’ என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கடலோர நகரங்களை மழை துவம்சம் செய்து வருகிறது.
Advertisement