ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனில் உள்ள சபோரிசியா Zaporizhzhia மீது, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் தீப்பிடித்தது என்றும், அங்கிருந்து புகை வெளியேறுவதை அதிகாரிகள் கவனித்ததாக அணுமின் நிலையம் உள்ள எனர்கோடர் நகரின் மேயர் கூறிய நிலையில், சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளத
மேலும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், அணுமின் நிலையத்தின் அனைத்து பக்கங்களிலிருந்தும் ரஷ்யா தாக்குதல்களை நடத்திய நிலையில், அணுமின் நிலையம் வெடித்தால், ஐரோப்பிய பிராந்தியத்தையே அழிக்கும் அளவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரித்திருந்தார்.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
மேலும், ரஷ்ய இராணுவம் உக்ரைனின் தலைநகரான கிவ்வில் நுழைந்ததாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வீடியோவை வெளியிட்டது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து 9 நாட்களாக போர் நடந்து வருகிறது. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பிறகு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி ரஷ்யாவின் கான்வாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுக்கும் படங்கள் வெளியாகி உள்ளன, அதில் 64 கிலோமீட்டர் நீளமுள்ள ரஷ்ய ராணுவத் தொடரணியைக் காணலாம்.
முன்னதாக, உக்ரைன் அணுமின் நிலையத்தை ரஷ்ய ஏவுகணை மூலம் தாக்கிய பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையே ராணுவம், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனின் அணுமின் நிலையத்தில் அவசரகால நிவாரணப் பணியாளர்களை அனுமதிக்குமாறு ஜோ பிடன் ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்