நேரடியாக ஓடிடியில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘சல்யூட்’

துல்கர் சல்மானின் ‘சல்யூட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ‘குருப்’ படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள மலையாளப் படம் ‘சல்யூட்’. மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியுள்ள இப்படத்தில் துலகர் சல்மான் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதனால், இப்படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.

image

நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் இப்படம் பொங்லையொட்டி தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா மூன்றாவது அலையால் தள்ளிப்போய் தற்போது நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இம்மாதமே சோனி லைவ் தளத்தில் வெளியாகும் இப்படத்தினை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.