உடற்பயிற்சியை எந்த வயதிலிருந்து செய்யத் தொடங்கலாம் என்பது பலருக்கு இருக்கும் சந்தேகம்.
அந்த சந்தேகததை பிரபல ஜிம்மில் உடற்பயிற்சி நிபுணராக பணிபுரிந்து வரும் திரு. சதீஷ் அவர்களிடம் முன்வைத்தோம்.
இனி அவரது வார்த்தைகளிலிருந்து..
உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்கிறோம் என்பதே முக்கியம். நமது உடல் நல்ல முறையில் இயங்க வேண்டுமென்றால் அதற்கு நாம் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றால் அதிக எடையை தூக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அதன்காரணமாக பலர் அச்சப்பட்டு உடற்பயிற்சி கூடத்துக்கு வராமல் தவிர்க்கிறார்கள்.
இதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதால் உடல் கட்டுக்கோப்பான வடிவத்தைப் பெறும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நாம் இளம்வயதில் ஓடி, ஆடி விளையாடியிருப்போம்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் கைபேசியில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளை இளம் வயதிலேயே ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துங்கள். சரியான பயிற்சி நிறுவனங்களில் சேர்த்து விடுங்கள்.
50 வயதுக்கு மேற்பட்டவர்களும் உடற்பயிற்சி செய்யலாம். அதனால், யோசிக்காமல் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை வயதானவர்களுக்கு சொல்லி கொடுத்து செய்ய வையுங்கள்.
அவர்களின் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி ஒன்றே சிறந்த ஆயுதமாக இருக்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கக் கூடியது உடற்பயிற்சி மட்டுமே.
பருப்பு சமைக்க, தேங்காய் உடைக்க, எண்ணெய் இல்லாத சிப்ஸ்-க்கு.. சிம்பிள் ஹேக்ஸ் இதோ!
ஆனால், ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிகளை சரியாக செய்ய வேண்டும். எனவே, சரியான உடற்பயிற்சி நிபுணரை தேர்வு செய்து அவரிடம் உடற்பயிற்சியை கற்றுக் கொள்ளுங்கள். பின்னர், கற்றுக் கொண்டதை தொடர்ந்து செய்யுங்கள். ஆரோக்கியமாக இருங்கள் என்கிறார்.
என்ன சந்தேகம் தீர்ந்துவிட்டது தானே!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“