பைபிளில் சொல்லப்பட்ட இறுதி யுத்தத்தின் ஆரம்பம்தானா உக்ரைன் -ரஷிய போர்?

உக்ரைன் -ரஷியா இடையேயான போர் தொடர்ந்து பத்தாவது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக போரில் களமிறங்கவில்லை என்றாலும், ஆயுத உதவி, பொருளாதார உதவி என பல்வேறு வழிகளில் உக்ரைனுக்கு இந்த நாடுகள் உதவி வருகின்றன. இதேபோன்று ரஷியாவுக்கு எதிராக பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் போரில் களமிறங்கியுள்ளன.

இப்படி இரு நாடுகளை மையமாக கொண்டு, உலக நாடுகள் இரண்டு அணிகளாக பிரிந்துவருவது எங்கே மூன்றாம் உலகப் போருக்கு கொண்டுபோய் விட்டுவிடுமோ என்ற அச்சம் உலக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அவர்களின் இந்த அச்சத்தை அதிகரிக்கும் வகையில், உக்ரைன் போர் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு – 56 பேர் உயிரிழப்பு!

அமெரி்க்காவின் பிரபல கிறிஸ்தவ தொலைக்காட்சி நிறுவனரான பாதிரியார் பாட் ராபர்ட்சன் தெரிவித்துள்ள கருத்துதான் தற்போது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் அது அவரது இலக்கு அல்ல; உக்ரைன் ஒரு சிறிய துவக்கம்தான். அவரது இலக்கு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளைத் துவக்குவதுதான். பல நாடுகள் ரஷ்யாவுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போர் குரல் எழும்பும் என்றும், அது பைபிளில் சொல்லப்பட்ட இறுதி யுத்தத்துடன் முடிவுக்கு வரும் எனவும் ராபர்ட்சன் அதி்ர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா!

மனிதர்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு சாவார்கள்; ஜல பிரளயம் ஏற்படும்; விஷப்பூச்சிகள் படையெடுக்கும் (வெட்டுக் கிளி), கொள்ளை நோய் உண்டாகும் (கொரோனா) என உலகம் அழிவதற்கான அறிகுறிகளாக பைபிளில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் நிஜத்தில் நடந்து வருகின்றன. இவற்றின் வரிசையில் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இறுதி யுத்தமும் வந்துவிடுமோ என்ற அச்சம் உலகமக்களை பீடித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.