நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, பேஸ்புக், கூகுள் ப்ளே-க்கு தடை விதித்த ரஷ்ய அரசு!

உலக நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது அடுத்தடுத்துத் தடை விதித்து வந்த நிலையில், இன்று விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு, அறிவிக்கப்படாத தடையா பல வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிக்கை நிறுவனங்களின் தளத்தை முடக்கப்பட்டு உள்ளது. இதனால் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சேவையை ரஷ்யாவில் மொத்தமாகத் தடை செய்யப்பட்டு உள்ளது.

நீங்க என்ன என்னைத் தடை பண்றது, நானே பன்றேன் என்ற தொனியில் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு தற்போது இயங்கி துவங்கியுள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு 12 ரூபாய் உயரும்.. ஜகா வாங்கிய OPEC நாடுகள்.. ரெடியா இருங்க..!

பிபிசி ரஷ்யா

பிபிசி ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து ரஷ்ய அரசை விமர்சனம் செய்த பிபிசி ரஷ்ய தளத்தைத் தற்போது ரஷ்யாவில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய அரசு பிபிசி ரஷ்யா தளத்தை முடக்கியுள்ளதாக எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்

பேஸ்புக்

இதேபோல் உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் அறிவிப்புக்குப் பின்பு பேஸ்புக் ரஷ்யாவின் அரசு செய்தி தளம் மற்றும் பிற அரசு சார்ந்த பக்கங்களுக்கு விளம்பரம் மற்றும் வருமானம் ஈட்டும் சேவை முடக்கியது. தற்போது ரஷ்யாவில் மொத்தமாகப் பேஸ்புக் தளம் முடங்கியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் யாராலும் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை.

முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

இதோடு கூகுள் ப்ளே ஸ்டோர், ஆன்லைன் செய்தி தளமான Meduza, Liberty என்னும் ரோடியோ தளம், Deutsche Welle எனப் பல மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக விளங்கும் நிறுவனங்கள் மீது விதித்து உள்ளது.

கூகுள்

கூகுள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றித் தவறான தகவல் கொண்ட தளத்தில் விளம்பரங்கள் காட்டுவதை நிறுத்து ரஷ்ய கட்டுப்பாட்டு அமைப்பு கோரிய நிலையில், கூகுள் மொத்தமாக விளம்பர சேவையைத் தடை செய்துள்ளது. கூகுள் முதல் முறையாக ஒரு நாட்டில் விளம்பர வர்த்தகத்தை மொத்தமாகத் தடை செய்துள்ளது. மாலையில் கூகுள் ப்ளே ஸ்டோரை மொத்தமாகத் தடை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia’s Putin Govt blocks BBC, Facebook, Google Play unofficially in Russian region

Russia’s Putin Govt blocks BBC, Facebook, Google Play unofficially in Russian region நீங்க என்ன என்னைத் தடை பண்றது நானே பண்றேன்.. பிபிசி, பேஸ்புக், கூகுள் ப்ளே-க்குத் தடை விதித்த ரஷ்ய அரசு!

Story first published: Friday, March 4, 2022, 20:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.