ஆசஸ் நிறுவனம் புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. விவோபுக் 13 ஸ்லேட் 2 இன் 1 என்று பெயரிடப்பட்டுள்ள மடிக்கணினி அனைத்து டாஸ்குகளுக்கும் உகந்ததாக இருக்கும் என ஆசஸ் தெரிவித்துள்ளது.
ஆசஸ் நிறுவனம், கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. அதுமட்டுமில்லாமல், மொபைல் தயாரிப்பிலும் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆசஸ் தரப்பில் இருந்து ரோஜ் 5 எஸ் கேமிங் போன், ஆசஸ் 8 இசட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நிறுவனம் ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய 2 இன் 1 லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பை டேப்லெட்டாகவும் பயன்படுத்த முடியும். புல் டச் ஓலெட் டிஸ்ப்ளே இந்த லேப்டாப்பின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஆசஸ் லேப்டாப் சிறப்பம்சங்கள்
இந்த லேப்டாப்பில் 13.3″ அங்குல டால்பி விஷன் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆசுஸ் பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டிடேச்சபிள் கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோபுக் 13 ஸ்லேட் OLED லேப்டாப்பில் OLED TV டால்பி விஷன் ஸ்கிரீனுடன் வழங்கப்பட்டுள்ளது.
Apple Event 2022: iPhone SE 3, M2 சிப்கள் அறிமுகமாவதாகத் தகவல் – நேரலையில் காண வாய்ப்பு!
இதில் வழங்கப்பட்டுள்ள 50Whr சார்ஜரைக் கொண்டு, 30 நிமிடத்தில் 100% விழுக்காடு பேட்டரியைச் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இந்த லேப்டாப்பை பயன்படுத்த முடியும்.
மேலும் டைப்-சி சார்ஜிங் போர்ட், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்ஸ் போன்ற பல்வேறு புதுமையான அம்சங்கள் இந்த லேப்டாப்பில் நிறைந்துள்ளது. இந்த டேப்லெட் + லேப்டாப் மூன்று வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது.
Google Play Pass அறிமுகம் – 1000க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்கள் இலவசம்!
ஆசஸ் 2 இன் 1 ஸ்லேட் லேப்டாப்பின் விலை ரூ.45,990 முதல் ஆரம்பமாகிறது. கைரேகை சென்சார், ஸ்டைலஸ், ஹோல்டர் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.57,990ஆக இருக்கிறது. அதன் 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.62,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஆசஸ் ஓலெட் டிவி
இந்தியாவில் தனது முதல் OLED டிவிக்களை விரைவில் ஆசஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. மார்ச் 3ஆம் தேதி இந்த டிவி வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் நடத்தியது. #WhoWatchesTV #WowTheWorld போன்ற ஹேஷ்டேக்குகளைக் கொண்டு ஆசஸ் நிறுவனம் தனது புது படைப்புகளை விளம்பரப்படுத்தி வருகிறது.
ஆசஸ் ரோஜ் போன் 5 எஸ் அம்சங்கள்
சிறந்த சாம்சங் டிஸ்ப்ளே, இரண்டு பேட்டரிகள், இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்டுகள், 8K வரை வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமரா, அதி திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
ஆசஸ் 8
இசட் ஸ்மார்ட்போன்
ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போனில் பிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாஸ்ட் போக்கஸ் கொண்ட சோனி கேமராக்கள் ஆகிய சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது.
மேலும் படிக்க