உக்ரைனில் உள்ள சபோரில்ஜியா அணு உலையின் மீது இரவு முழுவதும் ரஷ்ய படைகள் பீரங்கிகள் மூலம் குண்டு மழை பொழிந்ததாக உக்ரைன் அரசு சர்வதேச அணுசக்தி கழகத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதையடுத்து அணுசக்தி கழகத்தின் இயக்குனர் ஜெனரல் ரபேல் மாரியோனோ அணு உலைகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிமியலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.இதனிடையே அணுமின்நிலையம் அருகே யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கதிரியக்கம் இயல்பானநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.