பரியேறும் பெருமாள்’, ‘
கர்ணன்
‘ படங்களைத் தொடர்ந்து இயக்குநர்
மாரி செல்வராஜ்
உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘
மாமன்னன்
‘ எனும் படத்தை இயக்கிறார். ஃபகத் ஃபாசில்,
கீர்த்தி சுரேஷ்
முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்று இப்படத்தின் டைட்டில் லுக்
போஸ்டர்
வெளியானது. இதில்
வடிவேலு
பெயரை முதல் பெயராக எழுதி டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. வடிவேலுவைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும்
உதயநிதி
ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
Dhanush:ஐஸ்வர்யா பற்றி நல்ல வார்த்தை சொன்ன தனுஷ்
இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. சோசியல் மீடியாவில் காலை முதல் வைராலாகிவரும் இப்படத்தின் போஸ்டர் குறித்து நடிகர் வடிவேலுவிடம்பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.அப்போது அவரிடம் பேசிய வைகை புயல் வடிவேலு.
“மைசூர்ல படத்தோட ஷூட்டிங்கில இருக்கேன். ‘மாமன்னன்’ படத்தோட போஸ்டரை இன்னும் பார்க்கல. நீங்க சொல்லித்தான் என்னுடைய பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளதே தெரியும். கேட்குறப்போவே சந்தோஷமா இருக்கு. இதுக்காக மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதிக்கு நன்றி சொல்லிக்குறேன். இதை எனக்கு கிடைச்ச கெளரவமா பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மைசூர்ல ஷூட்டிங் முடிச்சிட்டு சேலம் போறேன். சீக்கிரம் சென்னை வந்துருவேன்” என்றார்.
“‘மாமன்னன்’ படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனலாகவும் உங்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும்னு கேள்விப்பட்டோமே…” என்று பத்திரிக்கையாளர்அவரிடம் கேட்க, “இந்தக் கேள்வியை டைரக்டர்கிட்டதான் நீங்க கேட்கணும்” எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் வடிவேலு.இதனையடுத்து படத்தின்ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் எனவும் இப்படத்துக்கு
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைக்கிறார்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?