இஸ்லாமாபாத்:நிதி ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு கூறிய சில நடவடிக்கைகளை பாக். எடுக்க தவறியதால் அதன்’கிரே’ பட்டியலில் அந்நாடு அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரீசில் நிதி ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது சட்ட விரோத பணப்பரிமாற்றம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி போன்றவற்றை கட்டுப்படுத்த தவறும் நாடுகளை கிரே பட்டியலில் சேர்த்து விடும். இந்த பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பன்னாட்டு நிதியம் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் கடன் தராது.கடந்த 2018ல் பாக். கிரே பட்டியலில் சேர்க்கப் பட்டது.
‘ஓராண்டிற்குள் பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதி சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த 27 அம்ச திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என அந்நாட்டிடம் தெரிவிக்கப்பட்டது. அதில் கடந்த ஆண்டு நிலவரப்படி 26 அம்சங்களை பாக். நிறைவேற்றியுள்ளது.இவை தவிர கூடுதலாக இரு அம்சங்களை நிறைவேற்றுமாறு பாக்.கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆய்வு நடக்கும் ஜூன் வரையிலான நான்கு மாதங்களுக்கு பாக். கிரே பட்டியலில் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement