அர்ஜென்டினாவில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிஷப் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணமான ஓரானில் உள்ள தேவாலயத்தில் பிஷப்பாக வேலை பார்த்து வந்தவர் குஸ்டாவோ சான்செட்டா. இவர் மீது எதேச்சதிகாரம், நிதி முறைகேடு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை அவருடன் பணியாற்றிய 5 பாதிரியார்கள் முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் முடிவில் சான்செட்டாவுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.