தனுஷ்
நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘
மாறன்
‘.
கார்த்திக் நரேன்
இயக்கியுள்ள இந்தப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தனுஷ். அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தனுஷ், மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் அருமையாக இருப்பதாக, பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர்கள் கூறினர். ஆனால் ‘மாறன்’ படத்தில் திரைக்கதை வசனம் எழுத தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த படத்தில் இருந்து தான் விலகி விட்டதாகவும் எனவே இந்த படத்தில் உண்மையாக வசனம் எழுதியவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார் விவேக்.
விரைவில் மறுமணம் செய்யும் பிரபல இசையமைப்பாளர்: வெளியான பரபரப்பு தகவல்..!
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக நான் ‘மாறன்’ படத்தின் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளரில் இருந்து விலகினேன். எனது முடிவை மதித்த குழுவிற்கு நன்றி. இன்று நான் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இதற்கு மாறன் தான் தொடக்கப் புள்ளி என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் வெளியாகிய பின்னரே விவேக் படத்திலிருந்து விலகிய விஷயம் தெரிய வந்தது குறித்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். ‘மாறன்’ படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மாறன்’ படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“வலிமை” யான வசூல் வேட்டை; படக்குழுவினர் ஹேப்பி !