மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுதலை என்றும்
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகிற 8-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஜூன் 24-ந் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
* 25-ந் தேதி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.
* 27-ந் தேதி பிரேத பரிசோதனை நடைபெற்றது
* ஜூலை 2-ந் தேதி உடலை பெற்றோர்கள் வாங்கி அடக்கம் செய்தனர்.
* இந்த கொலை தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
* யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர்.
* செப்டம்பர் 18-ந்தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை
* கோகுல்ராஜ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்.
* அக்டோபார் 11-ந் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார்.
* டிசம்பர் 25-ந்தேதி யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
* இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
* கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை.
* 2019ம் ஆண்டு மே 5-ந் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு.
* 2022 பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணை நிறைவு
* 2022 மார்ச் 5-ந் தேதி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.