மேகதாது திட்டத்திற்கு கர்நாடகா ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

மேகதாது திட்டத்திற்காக கர்நாடக நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2லட்சத்து 65ஆயிரத்து 720 கோடிக்கு செலவினங்கள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு 5ஆயிரம் கோடி ரூபாயும், கலசா – பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மேகதாது திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேகதாது திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.