தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 4-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கட்சி கட்டுப்பாட்டை மீறிய போட்டி வேட்பாளர்கள்.. திமுக கூட்டணிக்கு நெருக்கடியா?’ எனக் கேட்டிருந்தோம்.
yamunagopalakrishnan
தொண்டர்கள் இப்போதுதான் சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். குடும்ப ஆட்சிக்கு இனி சங்கூதப்போகிற காலத்தை விரைவில் எதிர் பார்க்கலாம்.
-ஸ்டீலி
அமைச்சர்களாக இருந்தாலும் சரி உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஏனென்றால் பொதுமக்கள் திமுக மீது வைத்திருக்கும் மரியாதை அப்போதுதான் நிலைத்திருக்கும்.
BabuMohamed
நெருக்கடி.. கிடையாது.. அவங்களும். மனிதர்கள்தானே…சொன்னா கேட்டுக்குவாங்க.. கூட்டணியில்… உள்ளவர்கள்… விளங்கிக்குவாங்க…..!”
sabirozgmail.com8
கூட்டணி ஜனநாயகத்திற்கு மாத்திரமல்ல; உட்கட்சி ஜனநாயகத்திற்கும் இது கேடு விளைவிக்கும்.
Shramana
தமிழகத்தில் “நகர்ப்புற உள்ளாட்சி ” அமைப்பில் கட்சி தாவல் தடை சட்டம் இருக்கின்றதா? ஒடிசாவில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இத்தகைய உட்கட்சி குழப்பம் நீங்க கொறடா முறை மற்றும் கட்சி தாவல் தடை சட்டம் உதவும்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM