உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் நகர் அருகே உள்ள தௌராலா ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் நின்றுக் கொண்டிருந்தது. சஹாரன்பூரில் இருந்து டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ரெயிலில் ஏராளமானோர் பயணித்திருந்தனர்.
இந்நிலையில், எஞ்ஜின் அருகில் இருந்த இரண்டு ரெயில் பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ரெயில் பெட்டிகளில் இருந்த அனைத்து பயணிகளையும் உடனடியாக வெளியேற்றினர். தீ இரண்டு பெட்டிகளில் பரவியதால், தீப்பிடித்த பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளை தனியாக பிரிக்கப்பட்டது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பயணிகள் அனைவரையும் மாற்று ரெயிலில் அனுப்பி வைக்ககப்பட்டனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ரெயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஒய்.கே. ஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்..
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி