புதுடில்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவினர், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் அந்த குழுவின் இடம்பெற்றுள்ள எம்.பி., திருச்சி சிவா கூறுகையில், உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அங்கிருந்து தமிழகத்தை சேர்ந்த 777 பேர் மட்டுமே தாயகம் வந்துள்ளனர். மேலும் வர வேண்டி உள்ளவர்கள் குறித்து எடுத்துரைத்தோம்.
அவர்களை மீட்பதற்காக அதிக விமானங்கள் அனுப்பப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவினர், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.