காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோரின் ‘முன்னாள்’ உதவியாளர் சுனில் கானுகோலு நியமனம்!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோரின் ‘முன்னாள்’ உதவியாளர் சுனில் கானுகோலு நியமிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூங்களை வகுக்கும் வகையில் கனுகோலு நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுகவின் பெரு வெற்றிக்கு வியூகம் அமைத்தவர் அரசியல் சாணக்கியன் என கூறப்படும் பிரசாந்த் கிஷோர். இவர் ஏற்கனவே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நிதிஷ்குமார், ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி போன்றோரின் வெற்றிக்காக வியூகம் வகுத்து, அதை செயல்படுத்தி வெற்றி வாகை சூட வைத்தவர். இவரை அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் வியூகம் வகுக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரசாந்த் கிஷோரோ, ஏற்கனவே 2017 உ.பி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியபோது அந்த அனுபவம் மோசமாக இருந்தது. எனவே எனக்கு காங்கிரஸ் மீது சந்தேகம் இருந்தது. என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது என்று கூறினார்.

இது சர்ச்சையானது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்காவுடன் நெருக்கமாக இருக்கும் பிரசாந்த் கிஷோரை, கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக சேர்ப்பதற்கு  பல மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மிகப் பழைமையான பாரம்பர்யமிக்க கட்சியில் இடையில் சிலரைச் சேர்ப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடாது. மூத்த தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், களத்தில் காங்கிரஸின் பலம் என்ன என்பதையும் உணர்ந்துகொண்டு அதற் கேற்றாற்போலச் செயல்பட்டாலே போதும். கட்சி சீரமைக்கப்படுவதோடு தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவிக்கலாம்” என மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இதுபோன்ற செயல்களால்,  பிரசாந்த கிஷோர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவது கேள்விக்குறியானது.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின்  ஐபேக் நிறுவனத்தில், அவருக்கு உதவியாளராக இருந்தவர் சுனில் கனுகோலு. இவர் கடந்த ஆண்டு நடைற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றிக்காக பணியாற்றினார். அந்தத் தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றிக்கு சுனில் தான் முக்கிய காரணமாக கூறப்பட்டார். அவரது ஐடியாவான, ‘நமக்கு நாமே’ பிரசார திட்டம், தி.மு.க.,வுக்கு அபார பலன் அளித்தது

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, சுனிலை தேர்தல் வியூக நிபுணராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் எம்.பி.,யான மாணிக் தாகூருக்கும், சுனில் கானுகோலுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாகவும், அதனால் அவரது சிபாரிசின் பேரிலேயே சுனிலை காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சுனிலுக்கு முதற்கட்டமாக அடுத்த ஆண்டு (2023ம் ஆண்டு) சட்டமன்ற நடக்க உள்ள கர்நாடகா, தெலுங்கானா சட்டசபை தேர்தல்களுக்கான வியூகப் பணிகள் கொடுக்கப்பட்டு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.